வியாழன், 30 நவம்பர், 2017

இப்போதும்
உன்னைக் காதலிக்கிறேன்..

மரணத்தின் வாசலில் ஒரு காலை வைத்து நுழையும் போது கூட நான் இதையே சொல்லக்கூடும்..

உன்னளவுக்கு
என்னால்
நேசிக்கப்பட்டதும்
வெறுக்கப்பட்டதுமாய்
வேறொன்று இருக்கவே முடியாது..
வேறொன்று இருக்கவும் கூடாது...

முரண்கள் முளைக்கும் போதெல்லாம்
உறவுகள் அழகாகின்றன..

உன்னோடு சமரசமாகவே முடியாது
முறைத்துக் கொண்டு நிற்கும் போதெல்லாம்
சமரசம் செய்ய முயல்வதே இல்லை நீ..

நானே தான் சமரசமாகிக் கொள்கிறேன்...

கோபத்தை நீட்டிப்பது எளிது..
ஆனால்
தாயைப் போல ப்ரியமான
உன்னைப் போல பிரிதொன்றை பெறுவது கடினம்..

கோபப்படுகிறேன்..
திட்டுகிறேன்..
வெறுக்கிறேன்..
சில போது
அடிக்கவும் செய்கிறேன்..

எனினும்
மீண்டும்
மழலையைப் போல ஓடியாந்து
உன் கால்களைக் கட்டிக் கொள்கிறேன்..

நீ ஏற்றுக்கொள்கிறாய்...

உடன்படவே முடியாத பொழுதுகளில்
நான் முறைக்கிறேன்
நீ அணைக்கிறாய்

ஏன் எனில்
நீ நான் என்பது
நாம்...

சத்தியமா இது ஒரு காதல் கவிதை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக